Monday 6th of May 2024 06:08:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
சா்வதேச விவகாரங்களில் ஒரு சில நாடுகள் முடிவெடுக்க அனுமதிக்க முடியாது  - சீன ஜனாதிபதி!

சா்வதேச விவகாரங்களில் ஒரு சில நாடுகள் முடிவெடுக்க அனுமதிக்க முடியாது - சீன ஜனாதிபதி!


சா்வதேச ரீதியான பிரச்சினைகளில் ஒரு சில நாடுகள் மட்டும் முடிவெடிக்க முடியாது. ஒரு சில நாடுகள் விதிக்கும் சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சா்வதேச பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண ஒன்­றி­ணைந்து செயற்பட வேண்­டும் எனவும் உலக நாடு­க­ளை அவா் கேட்­டுக் கொண்­டார்.

ஹைனா­னில் நடந்த பாவோ கருத்­த­ரங்­கில் இணை­யம் வழி கலந்­து ­கொண்டு நேற்று உரை­யாற்­றும்போது ஜி ஜின்­பிங் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் தலைவர்களும் இணைய வழியில் பங்கேற்றனர்.

அத்துடன், 2,000க்கும் மேற்­பட்ட வர்த்­த­கர்­கள் , சா்வதேச அமைப்­பு­க­ளின் தலைவர்களும் இந்த மாநாட்­டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஒரு தலைப்­பட்­ச­மான முடி­வு­கள், மேலா­திக்­க செயற்பாடுகளில் ஈடுபட ஒரு சில நாடுகளுக்கு இடம் அளிக்­கக்­கூடாது. அத்­து­டன் கொள்கை ரீதி­யில் வேறு­பாடு காண்­ப­தால் ஒரு நாடு மீது மற்­றொரு நாடு காட்­டும் மோதல் போக்கை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என கேட்­டுக் கொண்­டார்.

உலக நாடு­கள் ஒன்­றுக்­கொன்று சமத்­து­வம், நம்­பிக்கை, மதிப்­புடன் உறவுகளை வலுப்ப­டுத்த வேண்­டும்.

இன்­னொரு நாட்­டின் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யிட்டு, அவர்­க­ளுக்­குக் கருத்­துச்­சொல்வது போன்ற ஆண­வப் போக்­கு­களை சில நாடு­கள் கைவிட வேண்­டும். அனைத்து­லக நாடு­கள் விரும்­பு­வது நீதியை மட்­டுமே. மேலா­திக்­கத்தை அல்ல என ஜி ஜின்பிங் குறிப்­பிட்­டார்.

தொழில்­நுட்­பம், வர்த்­த­கம், ஹொங்­கொங், தாய்வான் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்தே அவா் இவ்வாறு மறைமுகமாகக் கருத்து வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதேவேளை, பரு­வ­நிலை மாற்­றத்­தைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து அதிகமான ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என இந்த மாநாட்டில் சீன ஜனாதிபதி வலியுறுத்தினார்.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE